பேராவூரணி:


பேராவூரணி வட்டத்தில் 85 பெருங் கிராமங்கள் உள்ளன. இவ்வூர்களுக்குப் பேராவூரணியே மையமாக இருப்பதால் வணிக முக்கியத்துவம் மிகுந்து காணப்படுகிறது. பல ஆயிரம் ஏக்கரில் தென்னந் தோட்டங்கள் வளர்ந்து காடாக காட்சியளிக்கும். அதனால் இளநீர், தேங்காய், கொப்பரை, மட்டை, போன்றவற்றின் துணைத் தொழில்களாக, கீற்று முடைவது, மட்டையிலிருந்து கயிறு திரித்தல், கொப்பரை, காயவைத்து தேங்காய் எண்ணெய் ஆட்டுவது போன்ற தொழில்கள் பேராவூரணியைச் சுற்றி நடைபெறுகிறது. தேங்காய் பவுடர் செய்யும் தொழிற்சாலை உள்ளது. குழல் விளக்கில் உபயோகப்படுத்தப்படும் எலக்ட்ரானிக் சோக் என்கின்ற சாதனத்தை 'ஓபல்' என்ற பெயரில் தயாரிக்கும் எலட்ரோஸ்டிரீக்ஸ் என்ற நிறுவனம் இந்திய அளவில் இயங்கி வருகிறது. மீன் பிடி வலை செய்யும் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளது. இவ்வூரைச் சார்ந்த பெருமக்கள்: முன்னாள் அமைச்சர் கோவேந்தன், காங்கிரஸ் தியாகிகள் வைரத்தேவர், வைரவன் சேர்வை, குருவிக்கரம்பை வேலு, கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம், ஏ.கே. சுப்பையன்.


0 comments:

பேராவூரணி செய்தி:

நண்பர்களே நமது பேராவூரணி 'ல் தமிழக அரசின் உத்தரவின் படி அரசு கலை அறிவியல் கல்லூரி
தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன் நண்பர்கள் புகைப்படத்தை பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன். நமது ஊரிலும் அரசுக் கல்லூரி இருப்பது மிகவும் நல்ல செய்தி தானே !!

1 comments:

பேராவூரணி செய்தி:


நமது பேராவூரணி தலை கிராமத்து குல தெய்வமாக திகழும் அருள்மிகு நீலகண்ட விநாயகர் கோவில் குடமுழுக்கு 2014 ல் நடக்கவுள்லதால் கோவில் திருப்பணி சிறப்பாக நடைப் பெற்றுக் கொண்டிருக்கிறது கோவிலின் படங்கலை
இன்னும் சில நாட்களில் வெளியிடுகின்றேன்

0 comments:

பேராவூரணி ரகசியம்,

படித்தவர்கள் மட்டுமே பிழைக்கும் அளவிற்கு மாறிக்கொண்டு இருக்கும் இந்த தமிழ்நாட்டில் தமக்கென்று ஒரு தொழிலை தேர்வு செய்து அதில் வெற்றியும் கண்டவர்கள் இந்த பேராவூரணி மக்கள் ஆ‌ம் அந்த தொழில் "குளிர்பான கடை(cool drinks)" இந்ததொழிலின் ரகசியம் இவர்கள் மட்டும் அறிவார்கள் இந்த தொழில் இன்று பேராவூரணி மக்களின் முக்கியமான ஒன்றாகி விட்டது தமிழ்நாடு தொடங்கி ஆந்திரா, கர்நாடகா வரை பரவி உல்லது இந்த தொழில்,

இந்த தொழிலுக்கான மூலதனங்கல் இந்த பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது ,இந்த கடைகளின் பெயர்கள் பெரும்பாலும் "நீவி சூப்பர் கூல்டிரிங்ஷ்","உதயம்","நீவி கூல்டிரிங்ஷ்" என்றே இருக்கும் நம்ம ஊருகாரர்லை காண வேண்டும்யென்ராள்
இந்த கடைகளுக்கு சென்ரால் போதூம்...




0 comments:

அரிசி சோறு... ஆட்டுக்கறி குழம்பு... அமர்க்களப்படும் ஆடி மொய் விருந்து!!


ஆடிமாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழா களை கட்டும். பொங்கல் வைக்கவும், பால் குடம் எடுக்கவும், கூழ் ஊத்தவும் கூட்டம் கூட்டமாய் மக்கள் படை எடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.


ஆடிமாதம் கோவில்களில் தெய்வங்களுக்கு விஷேசங்கள் நடத்தப்படுவதால் திருமணம் உள்ளிட்ட எந்த விஷேசங்களும் நடத்தப்படுவதில்லை. ஆனால்தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மொய்விருந்து விழா களை கட்டத்தொடங்கிவிடும்.


1967 ஆம் ஆண்டிற்குப்பிறகுதான் இந்த மொய்விருந்து நடைமுறை அதிகமாக காணப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணிசேதுபாவாசத்திரம் பகுதிகளிலும் திருச்சிற்றம்பலம்தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி வரையிலும்..........அப்புறம்.........நாடியம்தொடங்கி மேற்பனைக்காடு ....கீரமங்கலம் வரையிலும் மொய்விருந்து நடைமுறை மக்களிடம் இருந்துவருகிறது.


களைகட்டும் பேனர்கள்


ஆடி முதல் தேதியில் தொடங்கி கடைசி ஆடி வரைக்கும் தினம் ஒரு தெருவில்


மொய்விருந்து நடைபெறும். இதற்காக சிறப்பு அழைப்புகளை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களை விருந்துக்கு அழைக்கின்றனர் மொய்விருந்து வைப்பவர்கள். வீதிக்கு வீதி ப்ளெக்ஸ் பேனர்களில் மொய்விருந்து வைப்பவர்கள் சிரித்துக்கொண்டிருப்பார்கள். விருந்து நடைபெறும் தேதியை குறிப்பிட்டு வரவேற்பு பேனர்களும் ஆங்காங்கே வைத்திருப்பார்கள்


அரிசி சோறும் ஆட்டுக்கறி குழம்பும்


காதுகுத்து, திருமணம், பூப்புனித நீராட்டுவிழா போன்ற விழாக்களைப் போல இந்த விருந்து மண்டபத்தில் மட்டும் நடத்தப்படுவதில்லை. தெருவை அடைத்து பந்தல் போட்டு விருந்து நடத்தப்படுகிறது. இதற்கென கீற்றுக்கொட்டகை அமைத்து வாடகைக்கு விடுகிறவர்களும் உண்டு. பந்தலில் மணல் பரப்பிய தரையில்தான் கறிவிருந்து பறிமாறப்படும். உள்ளூர் சலவைத்தொழிலாளி விரித்துப்போடும் சேலையில் வரிசை வரிசையாக அமர்ந்து கையில் கொடுக்கப்படும் வாழை இலையை நாமே வாங்கி விரித்துக்கொள்ளவேண்டும்.


விருந்தின் போது நெல்லுச்சோறும் ஆட்டுக்கறி குழம்பும் பரிமாறப்படும். இந்தக்குழம்பிற்கென்று தனிச்சுவை உண்டு. மிளகுக்காரம் தூக்கலாக இருப்பதால் வயிற்றுக்கு கேடில்லை. காலமாற்றத்திற்கு ஏற்ப இப்போதெல்லாம் கோழிக்கறியும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. மிகச்சில விருந்துகளில் மட்டுமே சைவம் பரிமாறப்படும். அசைவ விருந்துகளில் அசைவம் சாப்பிடாதவர்களுக்கு தனியாக சைவ உணவு வழங்கப்படும். ஒரேநாளில் பல மொய்விருந்துகளுக்கு பணம் போட்டுவிட்டு பலவீடுகளிலும் சாப்பிடுபவர்கள் உண்டு.


மொய் வசூல்


மொய் வசூல் செய்வதற்காக ஐந்தாறு கவுண்டர்கள் செயல்படுவதுண்டு. அள்ளி கொடுக்கும் பணத்தை அண்டாவில் போட்டு பின்னர் கோணியில் கட்டி எடுத்துச் செல்வார்கள் விருந்து கொடுத்தவர்கள். கடந்த ஆண்டு நடைபெற்ற மொய்விருந்தில் ஒருவருக்கு ஒருகோடி ரூபாய் வரை வசூலானதாம்.


மூன்று நான்கு பேர்கள் கூட்டாகச்சேர்ந்து மொய்விருந்து நடத்துவது உண்டு. செலவினத்தை பகிர்ந்துகொள்வார்கள். வரவினத்தை தனித்தனியாக எழுதிக்கொள்வார்கள். இந்த பந்தல் பொதுப்பந்தல் என்று அழைக்கப்படும். மொய்ப்பணத்தை நோட்டில் வரவுவைக்கும் பணியில் மிகநெருங்கிய உறவினர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள்.


பெரிய அளவில் விளம்பரம் செய்து மொய்விருந்து நடத்துவதற்கு முதலீட்டுக்கு கவலைப்பட வேண்டியதில்லை. உள்ளூரில் இருக்கும் அரசு வங்கிகளின் மேலாளர்களின் சொந்தப்பொறுப்பில் கடன் வழங்குவார்கள் விருந்து முடிந்த பிறகு ஒரு பெரிய தொகை அந்த வங்கியில் நிரந்தர முதலீடு செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும்.


மொய்ப்பணத்தில் முதலீடு


மொய்ப்பணத்தை தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, நகரங்களில் புதிய வியாபாரம் தொடங்குதல், லேவாதேவி, புதிய பஸ்கள் வாங்குதல் என்றெல்லாம் முதலீடு செய்பவர்களும் இருக்கிறார்கள். பலகுடும்பங்களில் பொருளாதார ஏற்றத்திற்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் இந்த மொய்விருந்துகள் காரணமாக அமைந்துள்ளன.


ஒரே நாளில் ஒரே ஊரில் பலமொய்விருந்துகள் நடைபெறும்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரக்கணக்கில் பணம் தேவைப்படும். இதற்காக அவர்கள் கடன்வாங்கி மொய்செய்வது அதிகரித்து வருகிறது. இந்தக்கடனை அடைப்பதற்காகவே பெரும்பாலோரின் மொய்விருந்து வசூல் பயன்படுகிறது என்கிற தகவல் சிந்திக்கக்கூடியது. இது போன்ற நிகழ்வுகளின் போது ஊர்பஞ்சாயத்துகூடி மொய்விருந்து எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்.











0 comments:

பிறப்பு முதல் இறப்பு வரை கிடா வெட்டு


ஆமங்க இது உண்மைதான் தஞ்சை மாவட்டத்தின்  கடைகோடி பகுதியான பேராவுரணி அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற  பகுதிகளில்   நடக்கிறது .

பேராவுரணியைப் பற்றி பெரும்பாலும் தெறிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது தமிழ்நாட்டிலேயே  கோடிகணக்கில் மொய் வசூல் செய்யும் பகுதி  இதாங்க,  தேங்கயுக்கும் நெல் சாகுபடிக்கும்  அதிகமாக பெயர் பெற்ற  பகுதி   

இந்த ஊருக்கு  அருகிலேயே வங்காள விரிகுடா கடல் பகுதியும் அமைந்துள்ளது  எப்பொழுதும் பச்சைபசேல்லென்று காட்சியளிக்கும் இந்த பேராவுரணி 

இந்த ஊரை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமாக அமைந்திருக்கிறது களி,முனி,கருப்பராயன்,அய்யனார்   போன்ற தெய்வங்களுக்கான  கோவில்கள்  இங்கு நடைபெறும் கிடாவெட்டு பூஜையானது பிரதித்திபெட்றது  கரணம் பெரும்பாலும் பெண்கள் கலந்துகொள்வதில்லை  இங்கு வெட்டப்படும் கிடாய்கள் இங்கேயே சமைக்கப்பட்டு பரிமாறப்படுகிறது,

இந்த கிராமப்புற மக்களின்  வீடுகளில் நடைபெறும் அனைத்து சுக துக்க நிகழ்சிகளில்  கறி விருந்தே போடப்படுகிறது  காது குத்து தொடக்கி கல்யாணம்  பெயர் வைப்பது நிச்சயதார்த்தம் மொய்விருந்து போன்ற அணைத்து நிகழ்சிகளிலும் கிடா கறி நிச்சயம் .


அடுத்ததாக வருவது இந்த மொய்விருந்து நிகழ்ச்சி  ஆடி மாதம் தொடக்கி இரண்டுமாதங்கள் நடைபெறும் இந்த மொய்விருந்து (ம் ம் ம் .....) சூப்பர் .காரணம் 

 இந்த இரண்டு மாதங்களும் நடைபெறும்  மொய்விருந்தில் தினமும் கிடா   விருந்துதான்  
ஒரு வெள்ளை வேஷ்டி சட்டை இருந்தா போதுமுங்கோ உடம்பதேத்திபுல்லாம்...


நான் கண்டது 


ஒருவர் வீட்டில் நடைபெறும்  சுக துக்க நிகழ்சிகளுக்கு பக்கத்துவீட்டுகாரர்களை  கூட 
அழைக்காமல் தன் சொந்தங்களை மட்டும் கூட்டிக்கொல்லும் இந்த நகரத்து வாழ்கையில் 
ஒருவர் வீட்டில் நடைபெறும் அனைத்து நிகழ்சிகளிலும் ஒரு ஊரே கூடியிருக்கும் இங்கு சாதிகள்  பார்க்கப்படுவதில்லை ஏழை பணக்காரன் என்று பார்க்கப்படுவதில்லை 
இப்படியும் வாழ்கிறார்கள் இவர்கள் 


"சொந்தங்கள் பரம்பரையால் வருவதல்ல பாசத்தால் வருவது "

இதாங்க எங்க பேராவுரணி

0 comments:

Manora-Peravurani

Manora fort is situated 20 km away from the town of Pattukottai, Thanjavur district of Tamil Nadu, India. It was built by a Maratha king, Serfoji II in early 19th century. Serfoji II built this fort to showcase the win over Napolean army by the British army in the battle of waterloo. This fort also served as a base camp for the Britisher in many battles and also as a store house of their arms.

                    Its 230 meters high towers acted as the watch tower and also as the light house for the ships coming that way in the bay of bengal. The 8 storey tower was said to overlook a part of distant country Sri Lanka across the bay of bengal, a claim still unproven. It is said that the Lankan traders used to come to Manora and traded goods with their Indian counterparts.

                   Their are many claims regarding treasure Serfoji might have hidden inside the mazes of the fort. This claim resulted in the locals to damage the campus in search of the treasures but yielding none. Neglect from maintainance has already cost the heritage building severely that public are allowed to go until the 2nd floor of the 8 storey tower in fear of collapse of the tower. Also, it is claimed that an underground passege from this fort leads to the big temple in Thanjavur, 65 km away.

                    Many plans were tabled to improve the fort but all remained in the papers without moving further. The sea near the fort was planned to develop water sports, but when we got there the sea was filled with weeds and was in black in colour without much fanfare. The place was deserted with no tourists or even any persons in sight. Only the new modern lighthouse with a high gated compound looks fresh.

                   Without proper funds and government order it is impossible to bring back the glory of Manora, already ravage by peoples ignorance and natural disaster like the 2004 Indian Ocean tsunami. There are many age old legacies waiting behind the strong gates of Manora waiting to be told and revived.



























0 comments: